இந்தியா

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயார்: மத்திய அமைச்சர் பிரல்காத் ஜோஷி

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயார்: மத்திய அமைச்சர் பிரல்காத் ஜோஷி

Veeramani

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக உள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தயாராக இருக்கிறார். விவசாயிகள் போனில் தங்கள் விருப்பத்தை தெரிவித்தால் கலந்துரையாட பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 12 முறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனையடுத்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சில வன்முறைகள் நடந்தன, ஒரு விவசாயி உயிரிழந்தார். 

இனிமேல் பேச்சுவார்த்தைக்கு தானாக முன்வர முடியாது, விவசாயிகளே ஒரு முடிவு எடுத்து வந்தால்தான் ஒத்துழைப்போம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடியே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.