இந்தியா

ருவாண்டாவுக்கு 200 நாட்டுப் பசுக்களை வழங்குகிறார் பிரதமர் மோடி

rajakannan

பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி முதல் ருவாண்டா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த மூன்று நாடுகளில் மோடி 5 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

இதில், ருவாண்டா நாட்டிற்கு பிரதமர் மோடி முதன்முறையாக செல்கிறார். அந்நாட்டு பிரதமர் உடன் 23ம் தேதி இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை செய்கிறார். பின்னர், ருவாண்டாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ர்விரு மாதிரி கிராமத்தை மோடி பார்வையிடுகிறார். அப்போது, ருவாண்டா அதிபர் பவுல் ககமேவிடம் இந்திய நாட்டுப் பசுக்கள் 200-ஐ மோடி பரிசாக அளிக்கிறார். 

ருவாண்டா அரசு 2006ம் ஆண்டு ‘கிரிங்கா’ என்ற ‘ஒரு ஏழை வீட்டிற்கு ஒரு பசு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் அந்நாட்டில் 3.5 லட்சம் குடும்பங்கள் இதுவரை பயன்பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. பிரதமர் தனது பயணத்தின் போது, இந்தத் திட்டம் தொடர்பான விழாவில் பங்கேற்கிறார். அப்பொழுது இந்தியா சார்பில் 200 பசுக்களை அவர் அளிக்கவுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பசுக்களை கொடுப்பது ருவாண்டா நாட்டிற்கு பொருளாதார பங்களிப்பு அளிப்பதற்காகல்ல. ருவாண்ட் அரசு அந்நாட்டில் உள்ள இந்தியர்களை நல்ல முறையில் நடத்துவதற்காகதான்” என்றார்.