இந்தியா

இன்று சர்வதேச யோகா தினம்

webteam

நான்காவது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் யோகா பயிற்சி, கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் இந்திய தூதரகங்கள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் ஆயிரக்கணக்கானோருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.அரசின் சார்பில் நாடு முழுவதும் சுமார் 5000 நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களுக்கு அருகில் யோகா நடைபெறும் இடத்தை அறிந்துகொள்ள யோகா லொகேட்டர் என்ற செயலியை ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கியுள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கு யோகாவால் கிடைக்கும் பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த #yogaFor9to5 என்ற போட்டியை பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை நடத்துகிறது.