இந்தியா

"ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதுதான் குறிக்கோள்"- நரேந்திர மோடி

"ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதுதான் குறிக்கோள்"- நரேந்திர மோடி

webteam

தமது அரசில் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், பிரதமர் உட்பட பல தலைவர்கள் வறுமையில் வாழ்ந்தவர்கள் என்பதால், ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதுதான் அவர்களது முதன்மையான குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நான்காண்டு நிறைவு செய்ததை குறிக்கும் வகையில் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த பூமியில் உரையாற்றுவது குறித்து பெருமிதம் தெரிவித்தார். மக்களின் கனவுகளும், எதிர்பார்ப்புகளுமே தம்மை தொடர்ந்து பணியாற்ற உந்துவதாக கூறினார். 

தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள பலர் வறுமையில் வாழ்ந்தவர்கள் என்றும், அதனால்தான் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவது அவர்களின் முதன்மை குறிக்கோளாக இருக்கிறது எனவும் கூறினார். இந்தியா மாறமுடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாகவும், மோசமான நிர்வாகம் என்ற நிலையிலிருந்து, நல்ல நிர்வாகம் என்ற நிலையை நோக்கி நாடு முன்னேறிக்கொண்டிருப்பதாக, மத்திய அரசு சரியான பாதையில் நடைபோட்டுக்கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.