தடாசனா மற்றும் திரிகோனாசனா ஆகிய யோகானங்கள் செய்வது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வரும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து தடாசனா மற்றும் திரிகோனாசனா ஆகிய யோகானங்கள் செய்வது எப்படி என்பது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரை போன்ற அனிமேஷன் உருவம் யோகா செய்வது இடம்பெற்றுள்ளது.
தடாசனா யோகாவை முறையாக செய்யப் பழகினால், மற்ற பல யோகாசனங்களை சுலபமாகச் செய்ய முடியும் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோடி தான் யோகா செய்வதுபோல் ஏற்கெனவே ஒரு முறை வீடியோ வெளியிட்டிருந்தார்.