இந்தியா

அனைத்து மாநில மொழிகளிலும் நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி கடிதம் ?

அனைத்து மாநில மொழிகளிலும் நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி கடிதம் ?

jagadeesh

நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி கடிதம் எழுத உள்ளதாகவும் அது அனைத்து மொழிகளிலும் நாளை வெளியாகும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கம் மே 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்தித்துப் பேசினார். இதனையடுத்து நாளை பொது முடக்கம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு மார்ச் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3- ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து மே 17-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நடைமுறையிலிருந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி கடிதம் எழுத உள்ளதாகவும் அது அனைத்து மொழிகளிலும் நாளை வெளியாகும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் கடிதம் நாளை காலை அனைத்து செய்தித் தாள்களிலும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.