இந்தியா

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு 

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு 

webteam

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடன் நட்புரீதியாக, ஆழ்ந்த நெருக்கமாகப் பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ள பிரதமர், பாதுகாப்பு, அமைதி மற்றும் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றவும் விருப்பம் தெரிவித்துள்ளார். 

பிரதமரின் வாழ்த்துக்கு கோத்தபய ராஜபக்ச ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். வரலாறு மற்றும் பொது நம்பிக்கைகள் அடிப்படையில் இந்தியா, இலங்கை பிணைந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், இருநாடுகளிடையே நட்புறவை மேலும் வலுப்படுத்தவும் நேரில் சந்திக்கவும் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.