பிறந்தநாள் கொண்டாடும் பாடகி லதா மகேஷ்கருக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமா உலகில் பெரிய பாடகராக விளங்கி வருபவர் லதா மகேஷ்கர். அவரது 88 வது பிறந்தநாள் இன்று. அதனையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார். அதில் "லதா மகேஷ்கருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது இனிமையான குரலுக்காக கோடான கோடி இந்தியர்களின் பாராட்டுக்கள். நீங்கள் உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.