இந்தியா

“பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்”- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!

“பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்”- ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!

Rasus

உலக நாடுகளை பெரிதும் அச்சுறு‌த்தி வரும் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஜி-20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, துருக்கி, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, வடகொரியா, தென்கொரியா உள்பட வளர்ச்சியடைந்‌த 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனஸ் அயர்ஸில் நடைபெற்று வருகிறது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடி அங்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங், இங்கிலாந்து ‌பிரதமர் தெரசா மே, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே உள்பட பல தலைவர்களை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இப்பேச்சுக்கள் அமைந்தன.

பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, புதிய தொழிற்புரட்சியை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் தயாராக இருப்பதாக கூற‌னார். தீவிரவாதத்தை முற்றாக ஒழிப்பது உலக நாடுகளின் முன்பு பெரிய சவாலாக உள்ளது என்ற பிரதமர், பயங்கரவாதமும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களும் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக ‌உள்ளது என்றார். பய‌ங்கரவாதத்தை ஒழிக்க‌ அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.