பிரதமர் மோடி முகநூல்
இந்தியா

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

Prakash J

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ளார். இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார். இப்பயணத்தின்போது உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுகளுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என்றும் விஜிதா ஹெராத் தெரிவித்தார். இந்தியாவின் என்டிபிசி நிறுவன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சம்பூர் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்தார்.

மோடி பிரதமராக பதவியேற்ற பின் இலங்கை செல்வது இது 4ஆவது முறையாகும், எனினும் இலங்கை பிரதமராக அனுரகுமார திசநாயக பொறுப்பேற்ற பின் பிரதமர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. சீனாவுடன் இலங்கை நெருக்கத்தை பராமரிப்பதாக தகவல்கள் உள்ள நிலையில் பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

modi

முன்னதாக, இலங்கை பிரதமர் அனுரகுமார திசநாயக, கடந்த ஆண்டு இறுதியில் மூன்று நாட்கள் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது முதல்முறையாக இந்தியாவுக்கு வந்திருந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு உறவு குறித்து பிரதமர் மோடியும், அதிபர் அனுரகுமாரவும் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.