இந்தியா

மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்க உள்ள பெண்கள்

மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகிக்க உள்ள பெண்கள்

webteam

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் பெண்களுக்கு மரியாதை செய்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒரு நாளுக்கு நிர்வாகிக்கும் பொறுப்பு பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் படி மகளிர் தினமான நாளை பெண் சாதனையாளர்கள் பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகிப்பார்கள். மகளிர் தினத்தில் பெண்களை கவுரவிக்கும் வகையில் தமது சமூக ஊடக கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தார்.

இதற்கிடையில் பெண் சாதனையாளர்களுக்கு நாரி ஷக்தி விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை வழங்க உள்ளார்.

இதனிடையே சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அவர் விடுத்துள்ள செய்தியில் பெண்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவிக்க வேண்டிய நாள் இது என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் மரியாதையை உறுதிப்படுத்துவது மூலமே அவர்கள் தங்கள் லட்சியங்களை அடைய உதவ முடியும் என்றும் குடியரசுத் தலைவர் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.