இந்தியா

அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று - பிரதமர் மோடி நாளை ஆலோசனை

அதிகரிக்கும் ஒமைக்ரான் தொற்று - பிரதமர் மோடி நாளை ஆலோசனை

Sinekadhara

நாடெங்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடெங்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று 213 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு ஒமைக்ரான் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து ஒமைக்ரான் பரவலை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அத்துறை உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. முன்னதாக ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்கான சில கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

திருமணம் மற்றும் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும், அதிகளவில் கூட்டம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.