இந்தியா

இன்று மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி: என்ன பேச வாய்ப்பு?

இன்று மாலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி: என்ன பேச வாய்ப்பு?

webteam

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் தொடங்கிய கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. கொரோனா தொடர்பாக அவ்வப்போது நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளிட்டார்.

கொரோனா விழிப்புணர்வு குறித்து பல விஷயங்களையும் நாட்டு மக்களிடையே பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி பேசுவார் எனத் தெரிகிறது. இதற்கிடையே சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு நேற்று தடை செய்தது. எனவே இந்திய-சீன விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி பேச வாய்ப்புள்ளதாக தெரிகிறது.