இந்தியா

நாடு முழுவதும் உள்ள வாட்ச்மேன்களிடையே பிரதமர் மோடி உரை

நாடு முழுவதும் உள்ள வாட்ச்மேன்களிடையே பிரதமர் மோடி உரை

Rasus

நாடு முழுவதும் 25 லட்சம் வாட்ச்மேன்களிடையே பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

ஊழல், அசுத்தம் ஆகியவற்றுக்கு எதிராக நானும் காவலாளிதான் என்பதை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதன்படி மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தங்களின் பெயருக்கு முன்னால் காவலாளி என்று பொருள் தரும் ‘சவுகிதார்’ என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி நாடுமுழுவதும் காவலாளியாகப் பணியாற்றும் சுமார் 25 லட்சம் வாட்ச்மேன்களிட‌யே இன்று காணொலியில் உரையாற்றுகிறார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மாலை 4.30 மணியளவில் அவர் பேச இருக்கிறார். நானும் காவலாளிதான் பரப்புரையில் இணைந்த பொதுமக்களுடனும் பிரதமர் மோடி வரும் 31-ஆம் தேதி உரையாற்றவுள்ளார். இதற்காக 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.