இந்தியா

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரும் - பிரதமர் உறுதி

Sinekadhara

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

இந்த ஆண்டு  மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென் மாநிலங்களை அடுத்து தற்போது வட மாநிலங்களிலும், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றுசேர்ந்து சில நாட்களாக நிபந்தனையற்ற பேச்சுக்கு வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனது தொகுதியான வாரணாசியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என உறுதியளித்துள்ளார். இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, விளைபொருளுக்கு கூடுதல் விலை கிடைக்கச் செய்வதே இந்த சட்டங்களின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளை எதிர்க்கட்சிகள் திசை திருப்பி வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.