இந்தியா

பிரதமர் காலில் விழ முயன்ற பாஜக எம்பி: தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கிய மோடி..!

Rasus

பாரதிய ஜனதா எம்பி ஒருவர் பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற நிலையில் அவரை தடுத்தி நிறுத்திய பிரதமர், காலில் விழ வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பினார்.

பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாக அறைக்குள் நடந்த இந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்திற்கு பிரதமர் வந்தபோது உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்பி அசோக் குமார் தோஹரே திடீரென மோடியின் காலில் விழ முயன்றார்.

ஆனால், அவரை உடனடியாக தடுத்த பிரதமர், காலில் விழக்கூடாது என அறிவுறுத்தி தோளில் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.