ராமேஸ்வரம் முகநூல்
இந்தியா

’ 3 மடங்கு அதிக நிதியை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறோம்..’ - ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பேச்சு!

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

PT WEB

தமிழகத்திற்கு தங்கள் அரசு 3 மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் ஆனாலும் சிலர் அழுவதாகவும் பிரதமர் பேசியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சிக்கு தங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 3 மடங்கு அதிகமான நிதியை அளித்திருப்பதாகவும் அது மாநிலத்தின் வளர்ச்சிக்கு வெகுவாக உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அவ்வளவு பணம் ஒதுக்கியும் சிலர் அழுவதாகவும் பிரதமர் விமர்சித்தார் மக்கள் நலனுக்காக சாலைகள், குடிநீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக இலவச மருத்துவ சிகிச்சைக்கு உதவும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 8 ஆயிரம் கோடி ரூபாய் ஏழைகளுக்கு மிச்சமாகியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தமிழகத்தில் தமிழில் மருத்துவக்கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார் தமிழ்நாட்டில் இருந்து அரசியல் தலைவர்கள் தனக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவதாகவும் அப்போது குறைந்தபட்சம் தங்கள் கையெழுத்தையாவது தமிழில் இடக்கூடாதா என்றும் பிரதமர் விமர்சித்தார்.

தமிழக மீனவர் நலனுக்காக தாங்கள் பாடுபட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இலங்கை சிறைகளில் இருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விவரித்தார் 100 ஆண்டுகளுக்கு முன் பாம்பன் பாலத்தை கட்டியது ஒரு குஜராத்தி என்றும் தற்போது புதிய பாலத்தை திறப்பதும் குஜராத்தி என்றம் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.