ஒரு காலத்தில், கைரேகை வைப்பவர்களை படிக்காதவர்கள் என்று சொன்ன காலம் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ம்பேத்கரை கவுரவப்படுத்தும் விதமாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்டுள்ள பீம் ஆப்பை பயன்படுத்துவோருக்கு புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி.
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது பற்றி அவர் பேசும்போது, ’ஸ்மார்ட்போன், இன்டர்நெட், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு இல்லாதவர்கள் கூட, ‘ஆதார்’ அடிப்படையிலான இந்த ‘பீம்’ ஆப் மூலம் ரொக்கமில்லா பரிமாற்றத்தில் ஈடுபட முடியும். ஒரு காலத்தில், கைரேகை வைப்பவர்களை படிக்காதவர்கள் என்று சொன்ன காலம் இருந்தது. ஆனால், அதே கைரேகை, இப்போது பரிமாற்றத்துக்கு பயன்பட்டு, நமது வலிமைக்கு அடையாளமாக ஆகியுள்ளது. ‘டிஜிதான்’ என்ற ரொக்கமில்லா பரிமாற்ற திட்டம் என்பது, ஊழலை ஒழிப்பதற்கான முயற்சி. இந்த திட்டத்தை ஊக்குவிக்க பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ரூ.250 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு பெற்றவர்கள், ரொக்கமில்லா பரிமாற்ற இயக்கத்துக்கான தூதர்களாக மாற வேண்டும்’ என்றார்.