சாமானியர்களும் விமானத்தில் பயணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குஜராத்தில் பிரதமர் மோடி கூறினார்.
சாமானியர்களும் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் அதன் கட்டணங்களை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் துவாராகவில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், உலகம் தினமும் மாறி வருவதாகவும், அதற்கேற்ற வகையில் இந்தியாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் விரும்புவதாகவும் கூறினார்.
குஜராத்தில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். துவார்காதீஷ் கோவிலுக்கு சென்று வழிபாடு முடித்த பின், துவாரகாவில் 4 வழிப்பாதை தொங்கு பாலத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.