பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு சென்னை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தபடியே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து போட்டியை பார்வையிட்டுள்ளார். மேலும் சேப்பாக்கம் மைதானத்தின் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் மோடி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரு விளையாட்டரங்கில் இருந்து ரூ. 8,126 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். பின்பு சென்னையில் இருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு விமானத்தில் புறப்பட்டார் மோடி. சென்னை வருகை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நன்றி சென்னை, சிறப்பான வரவேற்பால் அகமகிழ்ந்தேன்” என தமிழில் பதிவிட்டார்.
பின்பு விமானத்தில் இருந்தபடியே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை பகிர்ந்த மோடி "வானத்தில் இருந்தபடியே சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான சுவார்ஸ்யமான டெஸ்ட் போட்டியை கண்டேன்" என பதிவிட்டுள்ளார்.