நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘’நிதிநிலை கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் விரிவான ஆரோக்கியமான விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் பட்ஜெட் தொடர் முக்கியமான நேரம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. மத்திய நிதிநிலை அறிக்கை உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விரிவாக விவாதிக்க மத்திய அரசு திறந்தமனதுடன் உள்ளது’’ என்று தெரிவித்தார்.