இந்தியா

''மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை'' - பிரதமர் மோடி!

''மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை'' - பிரதமர் மோடி!

webteam

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களிடையே மான் கி பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அந்தந்த மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி இந்த ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பகிர்ந்து கொள்வார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு வானொலியில் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, கொரோனா குறித்து பல விஷயங்களை பேசினார்.

அதில், ''கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள். அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது .அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை பேசுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்