இந்தியா

தியாகிகள் தினத்தில் தேசத்தை காக்க பாடுபட்டவர்களை நினைவு கூறுங்கள் - பிரதமர் மோடி

தியாகிகள் தினத்தில் தேசத்தை காக்க பாடுபட்டவர்களை நினைவு கூறுங்கள் - பிரதமர் மோடி

Sinekadhara

மகாத்மா காந்தியின் உன்னத லட்சியங்களை மேலும் பிரபலமாக்குவது நாட்டு மக்களின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவுதினம், தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி சமாதியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, இந்த புண்ணிய நாளில் நாம் ஒவ்வொருவரும் மகாத்மா காந்தியை நினைவுகூர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரது உன்னதமான லட்சியங்களை மேலும் பிரபலமாக்கும் வகையில் ஒருங்கிணைந்து அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தியாகிகள் தினத்தில் தேசத்தை காக்க தீரத்துடன் செயல்பட்ட உத்தமர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு, அவர்களது தாய்நாட்டு பணியையும், நெஞ்சுரத்தையும் என்றும் நினைவில் நிறுத்தவேண்டும் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.