இந்தியா

"மருத்துவர்கள் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை" பிரதமர் மோடி

"மருத்துவர்கள் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை" பிரதமர் மோடி

jagadeesh

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சக மருத்துவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டது நாட்டிற்கே பெரிய அவமானத்தை உண்டாக்கியுள்ளது. சில இடங்களில் மருத்துவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வாரை சிறைத் தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி " கொரோனா வைரஸ் எனும் தொற்று நோயை எதிர்த்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கல் ஆகியோர் போரிட்டு வருகின்றனர். எனவே மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.