இந்தியா

ரூ.500-க்கு மின் இணைப்பு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ரூ.500-க்கு மின் இணைப்பு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Rasus

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் 'சவுபாக்யா யோஜனா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி ரூ.500 செலுத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி இத்திட்டத்தைத் துவக்கி வைத்தார். ரூபாய் 16,320 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின்படி, 2018ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி, ரூபாய் 500 செலுத்தி மின் இணைப்பு பெறலாம். இந்த 500 ரூபாயை 10 மாத கால தவணையில் கூட செலுத்தலாம். இதனால் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி ஒரு முக்கியத் திட்டத்தைத் தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி சவுபாக்யா யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.