இந்தியா

சர்தார் சரோவர் அணை: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

சர்தார் சரோவர் அணை: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

webteam

குஜராத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். 

பிரதமர் மோடிக்கு இன்று 67 ஆவது பிறந்தநாள். இதை பாரதிய ஜனதா கட்சி சேவா தினமாக கொண்டாடுகிறது. இந்நிலையில் தனது பிறந்த நாளையொட்டி, சர்தார் சரோவர் அணையை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த அணையின் உயரம் சமீபத்தில் 138 புள்ளி 68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி அடையும். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுவர். 
பிரதமர் மோடி, அணையில் அருகில் 182 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் சர்தார் படேலின் சிலையையும் பார்வையிடுகிறார்.