படுக்கை வசதி கொண்ட இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
படுக்கை வசதி கொண்ட இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லும் இந்த ரயிலை மால்டா ரயில் நிலையத்திலிருந்து பிரதமர் தொடங்கிவைத்தார். இந்த புதிய ரயில் கொல்கத்தா, கவுஹாத்தி பயண நேரத்தை இரண்டரை மணி நேரம் குறைக்கும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்திற்குரிய வசதிகளுடன் இந்த ரயில் சேவை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்திற்கான 6 ரயில்களும் அடங்கும். இதில் ஒரு அம்ரித் பாரத் ரயில் திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், சென்னை எழும்பூர் வழியாக நியூ ஜல்பைகுரி செல்லும். மற்றொரு அம்ரித் பாரத் ரயில், நாகர்கோயிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, பழனி, கோவை, ஈரோடு, காட்பாடி, ரேணிகுண்டா வழியாக நியூஜல்பைகுரி செல்லும். மற்றொரு அம்ரித்பாரத் ரயில் சென்னை தாம்பரத்திலிருந்து மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாச்சிக்கும் இயக்கப்படுகிறது. இம்மூன்றும் வாரம் ஒருமுறை இயக்கப்படும். பெங்களூருவிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக 3 புதிய ரயில் சேவைகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.