இந்தியா

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: கனடா பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: கனடா பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

webteam

இந்தியா வந்துள்ள கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்தி‌ர மோடி வரவேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது. காரிலிருந்து இறங்கிய கனடா பிரதமரை நரேந்திர மோடி கட்டித் தழுவி வரவேற்றார். பின்னர் அவரது 3 குழந்தைகளுடனும் நரேந்திர மோடி கொஞ்சி மகிழ்ந்தார்.

முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஜஸ்டின் வருகை பற்றி குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, ட்ரூடோவையும், அவரது குழந்தைகளையும் சந்திக்க ஆவலுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு கனடா சென்றிருந்தபோது ஜஸ்டின் ட்ரூடோ, எல்லா கிரேஸுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். கனடா பிரதமரை முறைப்படி வரவேற்கவில்லை என சமூக வலைதளங்களில் பலர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.