இந்தியா

“பல மொழி பேசும் மக்களின் நாட்டிற்கு ட்ரம்ப்பை வரவேற்கிறேன்” - பிரதமர் மோடி

“பல மொழி பேசும் மக்களின் நாட்டிற்கு ட்ரம்ப்பை வரவேற்கிறேன்” - பிரதமர் மோடி

webteam

பல மொழி பேசும் மக்களின் நாட்டிற்கு ட்ரம்ப் வருகை தந்துள்ளதை வரவேற்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மெலனியா, மோடி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இருநாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

பின்னர், நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “பல மொழி பேசும் மக்களின் நாட்டிற்கு ட்ரம்ப் வருகை தந்துள்ளதை வரவேற்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கிறேன். நமஸ்தே ட்ரம்ப் நிகழ்வை வெற்றி பெற செய்த குஜராத் மக்களுக்கு நன்றி. களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

5 மாதங்களுக்கு முன் ஹவுடி மோடியுடன் எனது அமெரிக்க பயணம் தொடங்கியது. தற்போது நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியுடன் தனது இந்திய பயணத்தை தொடங்கியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலை. இந்தியாவில் ஒற்றுமை சிலை. சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கப்படுகிறது. இருநாட்டு உறவை அடுத்தக்கட்டத்திற்கு இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லும். உறுதியளித்தபடியே ‘இவாங்கா’ மீண்டும் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.