இந்தியா

உலகின் நீளமான சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.!

Veeramani

இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து, லடாக்கின் லே பகுதியை இணைக்கும் அடல் ரோடங் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மணாலியில் இருந்து லடாக்கின் லே-வுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியே 9.02 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது இந்த நெடிய சுரங்கப்பாதை. கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரத்து 44 அடி உயரத்தில் 13 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பொறியியல் துறையின் சவாலாகக் கருதப்படும் இந்த சுரங்கப்பாதை பத்து ஆண்டு கடும் உழைப்பின் சின்னமாக உருவாகியுள்ளது. ஒவ்வொரு 60 மீட்டர் தூரத்திற்கும் கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு 500 மீட்டருக்கு இடையே அவசர கால வெளியேறும் வசதி, தொலைபேசி வசதி, காற்றோட்ட வசதி என பல வசதிகள் உள்ளன.

இந்த புதிய சாலையின் மூலம் மணாலிக்கும் லே பகுதிக்குமான 46 கிலோ மீட்டர் பயண தூரம் குறைகிறது. கடல்மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள இந்த இரட்டைவழி சுரங்கப்பாதை மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் நீளமான சாலை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத்திட்டம். இந்த எல்லைச் சாலைகள் அமைப்பதற்காக பத்து ஆண்டுகள் உழைப்பும், 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும் இச்சாலையை உருவாக்கியுள்ளது.