இணையத்தில் கடந்த சில தினங்களாக ஆக்கிரமித்திருக்கிறது Ghibli-style படங்கள். ChatGPTயில் புது வரவாக வந்திருக்கும் இந்த AI-generated animation படங்கள் மீது பெரிய அளவில் கவனம் குவிந்துள்ளது.
ஒரு பக்கம் இது மிகப்பெரிய அளவில் பரவி வந்தாலும், இன்னொரு பக்கம் வலுவான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. கலை வடிவத்தை, செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமிக்கிறது என்ற அச்சம் அதில் பிரதானமாக இருக்கிறது.
இந்தவகையில்,சமீபத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், தனது புகைப்படத்தை அனிமேஷனமாக மாற்றி அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
இந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் சில புகைப்படங்களை ஸ்டூடியோ கிப்லி மூலம் அனிமேஷன்களாக மாற்றப்பட்டு அவை MyGovIndia எக்ஸ் பக்கத்தில் அரசு பகிரப்பட்டுள்ளது.
"முக்கிய கதாபாத்திரமா? இல்லை. அவர்தான் முழு கதைக்களமும்.
ஸ்டுடியோ கிப்லி ஸ்ட்ரோக்குகளில் புதிய இந்தியாவை அனுபவியுங்கள்"
என்ற கேப்ஷனோடு அந்த புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.
இதில், , இந்திய ராணுவ சீருடையில், மூவர்ணக் கொடியை ஏந்தியபடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் போன்ற உலகத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.