இந்தியா

நெருங்கும் பஞ்சாப் தேர்தல் - சீக்கிய தலைவர்களுக்கு மோடி விருந்து

ஜா. ஜாக்சன் சிங்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சீக்கிய தலைவர்களை தனது இல்லத்துக்கு அழைத்து பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக இந்த தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், முக்கிய சீக்கிய தலைவர்களை தனது இல்லத்திற்கு இன்று அழைத்து பிரதமர் மோடி விருந்தளித்தார். டெல்லி குருத்வாரா கமிட்டி தலைவர் ஹர்மீத் சிங் கல்கா, பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாபா பல்பிர் சிங் உள்ளிட்டோர் இவ்விருந்தில் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "கலாசாரத்திற்கும், சமூக சேவைகளுக்கும் முன்னோடிகளாக விளங்குபவர்கள் சீக்கியர்கள்" என பதிவிட்டுள்ளார்.