இந்தியா

பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ஏலம் - அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் விலை

webteam

பிரதமர் நரேந்திர மோடியின் பரிசுப் பொருட்களின் விலை அதிகபட்சமாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். மேலும் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்‌.‌ அப்போது அவருக்கு சால்வை, தலைப்பாகை, ஓவியங்கள், நினைவுச்சின்னங்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்து 700க்கும் மேற்பட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்கள் இன்று முதல் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி வரை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட உள்ளன. 

குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் அதிகபட்சமாக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஏல விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் 576 சால்வைகள், 964 அங்கவஸ்திரம், 88 தலைப்பாகைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை கங்கையை தூய்மைபடுத்தும் திட்டத்துக்கு ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகிறது.