இந்தியா

“மகான் திருவள்ளுவரை வணங்குகிறேன்” - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

“மகான் திருவள்ளுவரை வணங்குகிறேன்” - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

webteam

திருவள்ளுவர் தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

திருவள்ளுவரை போற்றும் வகையில் தை 2ஆம் (ஜனவரி 16) தேதியான இன்று ‘திருவள்ளுவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மாரியதை செலுத்தினர். அத்துடன் அரசியல் தலைவர்களும் தங்கள் மரியாதையை தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழில் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவரது பதிவில், “திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன” என தெரிவித்திருக்கிறார்.