Modi
Modi ANI Digital
இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து பிரதமர் மரியாதை

PT WEB

புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா இன்று ஹோமங்களுடன் தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களின் சிலருக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். பிறகு அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமான பணிகளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்தனர்.

PM Modi

முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பிற மதங்களைச் சேர்ந்த மத போதகர்களும் கலந்து கொண்டனர். புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலை வகித்தனர். ஹிந்து மத போதகர்கள் மந்திர வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அதேபோல இஸ்லாமிய கிறிஸ்தவ பார்சி ஜூ சீக்கியர் உள்ளிட்ட 12 மதங்களைச் சேர்ந்த மத போதகர்கள் கலந்து கொண்டு தங்களது மத வழிபாட்டு முறையில் பிரார்த்தனை செய்தனர்.

இவர்களுக்கு என்று தனியாக பந்தல் அமைக்கப்பட்டு தனித்தனியாக வழிபாட்டில் ஈடுபட்ட நிகழ்ச்சிக்காக வந்திருந்த உங்கள் கிட்ட சிறப்பு விருந்தினர்கள் இவர்களது பிரார்த்தனைகளிலும் கலந்து கொண்டனர்.