pm modi ani
இந்தியா

"இந்திய வாகனங்களுக்கு உருவாகும் புதிய சந்தைகள்.." பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

இந்திய வாகனங்களுக்கு உலகெங்கிலும் புதிய சந்தைகள் உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

PT WEB

இந்திய வாகனங்கள் உலக சந்தையில் வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பல நாடுகளுடன் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய வாகனங்களுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளைத் திறந்துள்ளன. மேக் இன் இந்தியா, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மூலம் உற்பத்தி அதிகரித்து, உலகம் முழுவதும் இந்திய வாகனங்கள் பயணிக்கும் நிலை உருவாகி வருவதாக அவர் கூறினார்.

இந்திய வாகனங்கள் உலகெங்கும் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அண்மையில் பல நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய வாகனங்களுக்கு புதிய சந்தைகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்திய வாகனத்துறை தற்போது பெரும் மாற்றங்களை கண்டு வருவதாகவும் இதற்கேற்ப சார்ஜிங் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதில் அரசு முனைப்பாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேக் இன் இந்தியா, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் ஆகியவை மூலம் வாகன உற்பத்தி பெருகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய வாகன நிறுவனங்களின் கூட்டமைப்பான சியாம் அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் உரை வாசிக்கப்பட்டது.