இந்தியா

கொரோனா யுத்தம் - 40 விளையாட்டு பிரபலங்களோடு மோடி கலந்துரையாடல் !

கொரோனா யுத்தம் - 40 விளையாட்டு பிரபலங்களோடு மோடி கலந்துரையாடல் !

jagadeesh


பிரதமர் நரேந்திர நோடி காணொலி காட்சி மூலம் சச்சின் டெண்டுலகர், கங்குலி, ஹிமா தாஸ், பிவி சிந்து உள்ளிட்ட 40 விளையாட்டு பிரபலங்களோடு கொரோனா வைரஸ் அச்சம் குறித்து உரையாற்றி வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 23 ஆம்தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றி, கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு மீண்டும் காணொலி மூலம் மக்களிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப்போவதாக நேற்று அறிவித்தார்.

அதன்படி இன்று பேசிய மோடி, “ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இந்திய மக்கள் ஊரடங்கிற்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்"

மேலும், “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், விளையாட்டுத்துறையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் உள்ளிட்ட 40 பிரபலங்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது, கொரோனா பாதிப்பு குறித்து அவர் கேட்டறிந்ததார். இந்த கலந்துரையாடலில் பிவி சிந்து, ஹிமா தாஸ் உள்ளிட்ட முக்கியமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடலின் போது கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அவர்களிடம் பிரதமர் பேசியதாக தெரிகிறது.