இந்தியா

தமிழக பாஜகவின் மையக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்த பிரதமர் மோடி... இதுதான் காரணமா?

webteam

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி உள்ளளார். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் பாஜகவின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின்றன.

இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்து விட்டு ஆளுநர் மாளிகைக்கு சென்றார். நேற்று இரவு அங்கு தங்கிய அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம், வானதி சீனிவாசன், கருப்பு எம்.முருகானந்தம் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் அவருடன் சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அடுத்த நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு எவ்வாறு தயாராகி வருகிறது, தமிழகத்தின் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை எதிர்காலத்தில் கூட்டணி கட்சிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் சொல்கின்றன.

தமிழக பாஜகவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மாநில மையக் குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பிரதமரின் இந்த ஆலோசனை பாஜகவின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு கூட்டத்துக்கு முன்பாக பிரதமரை பாஜக மாநில விளையாட்டுப்பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.