PM SVANidhi திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து web
இந்தியா

PM SVANidhi திட்டம்| ”ஏராளமான சாலையோர வியாபாரிகளுக்கு பலன்..” பிரதமர் மோடி வாழ்த்து!

பிஎம் ஸ்வநிதி திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

சாலையோர வியாபாரிகளுக்கான பிஎம் ஸ்வநிதி திட்டம் மூலம் ஏராளமானோரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சாலையோர வியாபாரிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட பிஎம் ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டு 6ஆண்டுகள் ஆனதை ஒட்டி பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிஎம் ஸ்வநிதி திட்டத்தால் ஏராளமான சாலையோர வியாபாரிகள் பிணையற்ற கடன் பெற்றுள்ளனர் என்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை பெற்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிஎம் ஸ்வநிதி திட்டம் மூலம் ஒரு கோடியே 12 லட்சம் பேருக்கு 17 ஆயிரத்து 800 கோடி ரூபாய் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

PM SVANidhi திட்டம் என்றால் என்ன?

பி.எம் ஸ்வநிதி (PM SVANidhi - PM Street Vendor's AtmaNirbhar Nidhi) என்பது இந்திய அரசால் சாலையோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையுமின்றி சுலபமாக கடன்களை வழங்கும் திட்டமாகும். கடனை முறையாக செலுத்தும் பயனாளிகளுக்கு ஆண்டிற்கு 7% வட்டி மானியமும், கடனை முறையாக திருப்பி செலுத்துபவர்களுக்கு அடுத்தடுத்து கடன்தொகை அதிகம் பெறுவதற்கான வழிமுறைகளும் செய்யப்பட்டுள்ளன.