இந்தியா

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

Rasus

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார்.

இரண்டாவது முறையாக பிரதமரானதைத் தொடர்ந்து முதல்முறையாக அவர் திருப்பதி சென்றார். அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். சுமார் 10 நிமிடங்கள் வரை வழிபட்ட பிரதமருக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோடிக்கு கோயில் பிரசாதமும், வெங்கடாசலபதி - பத்மாவதி தாயார் புகைப்படம் வழங்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக ரேணிகுண்டாவில் நடந்த நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ஆந்திர மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்தார். ஆந்திர மாநிலத்தில் வார்டு அளவிலான தேர்தலில் கூட பாஜக வெற்றி பெறவில்லை என்றாலும் அது தங்களுக்கு முக்கியமில்லை என்றும் மக்களின் முன்னேற்றத்துக்கு சேவையாற்றவே பாஜக அரசு இருப்பதாகவும் மோடி தெரிவித்தார். ஆந்திராவைப் போல தமிழகத்திலும் பாஜக அரசின் பணிகள் தொடரும் என்றும் மோடி குறிப்பிட்டார்