இந்தியா

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுவிழா

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்: இன்று அடிக்கல் நாட்டுவிழா

Rasus

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இன்று அடிக்கல் நாட்டுகின்றனர்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில், நேற்று வந்திறங்கிய அவரை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக 8 கி.மீ தூரம் வரை சென்றனர். அப்போது ஏராளமான மக்கள் சாலையில் இரு மருங்கிலும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அவரது மனைவிக்கு காந்தியடிகள் தங்கியிருந்த அந்த இடத்தின் சிறப்பு குறித்து பிரதமர் மோடி விளக்கினார்.

இதைத் தொடர்ந்து இன்று அகமதாபாத் - மும்பை இடையே செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரயில் திட்டத்திற்கு இரு தலைவர்களும் அடிக்கல் நாட்ட உள்ளனர். ஜப்பான் பிரதமரின் வருகையை ஒட்டி அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.