சாலைகள், மின்னுற்பத்தி உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு மாநில அரசுகளை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவையான மூலதனச் செலவுகளை தாராளமாகச் செய்யுமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். 15 ஆண்டு கால இலக்கு. 7 ஆண்டுகளுக்கான யுக்தி, 3 ஆண்டுகளுக்கான செயல் என 3 கட்டங்களாக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த நிதி ஆயோக் பரிசீலித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முதல்வர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி ஆகியோர் இக்கூட்டத்திற்கு வரவில்லை.