இந்தியா

யாருக்கு என்ன பதவிகள் ? மோடி - அமித் ஷா மூன்றாவது நாளாக ஆலோசனை

யாருக்கு என்ன பதவிகள் ? மோடி - அமித் ஷா மூன்றாவது நாளாக ஆலோசனை

Rasus

பிரதமராக மோடி இன்று இரண்டாவது முறையாக பதவியேற்கும் நிலையில், அவருடன் அமித் ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாட்டின் பிரதமராக நநேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பல வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், விளையாட்டு பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியேற்பதையொட்டி டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏற்கெனவே நேற்றும் மோடியுடன் அமித் ஷா கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆலோசனை நடத்திய நிலையில் இன்றும் ஆலோசனை நடைபெற்றது. மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்பன குறித்து இதில் கலந்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் இந்த முறை அமித் ஷா இடம் பெறலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்தும் இதில் பேசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதனிடையே பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுவிற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.