இந்தியா

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்ட சலுகை வரம்பு உயர்வு

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்ட சலுகை வரம்பு உயர்வு

webteam

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகரப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு பரப்பளவு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகரப்பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு நடுத்தர வருவாய் பிரிவில் முதல் நிலையினருக்கான பரப்பளவு வரம்பு 120 சதுர மீட்டரிலிருந்து 160 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது, இதே பிரிவில் 2ம் நிலையினருக்கான பரப்பளவு வரம்பு 150 சதுர மீட்டரிலிருந்து 200 சதுர மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல் தேதியிலிருந்தே கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டத்தில் மேலும் பலர் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீட்டிற்கான கடனில் 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக பெற முடியும். ஆண்டுக்கு 6 முதல் 12 லட்சம் ரூபாய் வரை வருவாய் பெறுவோர் நடுத்தர வருவாய் பிரிவு முதல் நிலையினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 4% வட்டி மானியத்துடன் 9 லட்சம் ரூபாய் வரை வீட்டுக்கடன் பெற முடியும். ஆண்டுக்கு 12 முதல் 18 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் 2ம் நிலையினராக வகைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் 3 சதவீத வட்டி மானியத்துடன் 12 லட்சம் ரூபாய் வரை வீட்டுக்கடன் பெற முடியும். அரசின் திட்டத்தின் கீழ் கடந்த 11ஆம் தேதி வரை 35 ஆயிரத்து 204 பேர் பலன் பெற்றுள்ளனர்,