இந்தியா

பிரதமர், குடியரசுத்தலைவர் பக்ரீத் வாழ்த்துக்கள்

பிரதமர், குடியரசுத்தலைவர் பக்ரீத் வாழ்த்துக்கள்

webteam

சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை பெருகட்டும் என பிரதமர் மோடி, பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இஸ்லாமியர்கள் பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர், ஆளுநர் மற்றும் பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பக்ரீத் பண்டிகைக்கு தனது ஆத்மப்பூர்வ நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். அத்துடன் சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை பெருகட்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று டிவிட்டரில் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.