தமிழக அரசின் 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நெல்லையைச் சேர்ந்த திருமா மகள் என்ற மாணவியின் சார்பாக அவரது தந்தை கோவிந்த ராஜ் இவ்வழக்கை தொடர்ந்திருந்தார். 69% இட ஒதுக்கீடு சட்டத்தால் தனது மகளுக்கு மருத்துவப்படிப்பு வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம் தர முடியாது என்றும், காலதாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இவ்வழக்கை தற்போது விசாரிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.