இந்தியா

திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை.. மீறினால் அபராதம்..!

Rasus

திருப்பதி திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை  விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை முதல் அதவாது நவம்பர் 1-ஆம் தேதி முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு ரூபாய் 5,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதற்கு பக்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை திருமலைக்கு வரும் பக்தர்கள் கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.