இந்தியா

மகாராஷ்டிர அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் அதானி, அம்பானி மகன்கள்!

மகாராஷ்டிர அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் அதானி, அம்பானி மகன்கள்!

webteam

மகாராஷ்டிர மாநில அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரபல தொழிலதிபர்களான கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் மகன்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஓர் அறிக்கையால் ஆசியாவின் மிகப் பிரபலமான தொழில் நிறுவனமான அதானி குழுமம், கடுமையான பொருளாதார சரிவைச் சந்தித்து வருகிறது. இந்தப் பொருளாதார சரிவால் அதானி குழுமம் பற்றி வெவ்வேறு தகவல்கள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், அதானியின் மகன் கரண் அதானிக்கு, மகாராஷ்டிர மாநிலத்தின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தோர் மகாராஷ்டிர மாநில அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் அங்கத்தினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். டாடா குழுமத்தின் தலைவரான என்.சந்திரசேகரனை தலைவராகக் கொண்ட இந்த குழுவில் அதானி குழுமத்தின் கரண் அதானிக்கும் ஓர் உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், ’அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல், மற்றொரு தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் இந்தக் குழுவில் உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.