புரபைல் பிக்சர்களைப் பாதுகாப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி சமூகவலைதளங்களில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த வசதி இந்தியாவில் ஆன்லைன் பாதுகாப்பினை உறுதிசெய்யும். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்று கூறியுள்ளார். பின்னர் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் பினராயி, அதன் மூலம் அரசு மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகிறார். ஆன்லைனில் பெண்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் பெண்களுக்கு நீங்கள் பாதுகாப்பு அளித்தால், சமூகத்துக்கே பாதுகாப்பு அளிப்பது போல என்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ஷெரீல் சேன்ட்பெர்க்கின் கருத்தையும் பினராயி விஜயன் தனது பதிவில் மேற்கோள் காட்டியிருக்கிறார்.