இந்தியா

சபரிமலைக்கு வருகை தந்த பினராயி விஜயன்

சபரிமலைக்கு வருகை தந்த பினராயி விஜயன்

webteam

கேரள முதல்வர் பினராயி விஜயன் ’மண்டல பூஜை’ ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு வந்தார். 

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் நவம்பர் மாதம் முதல் மண்டல பூஜை தொடங்க உள்ளது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கு பெறுவார்கள். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பற்றி விவரிக்கும் மண்டல பூஜை ஆலோசனை சபரிமலையில் இன்று நடந்தது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அவருடன் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கு பெற்றனர். முதலில் பம்பை சென்ற முதலமைச்சர் பின்பு அங்கிருந்து சபரிமலை கோயில் சென்றார். அதன் பின்பு அங்கு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டடுள்ளதா என்பதை பார்வையிட்டார். சபரிமலையில் இன்று முதல் 21ஆம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரநாமம், களபாபிஷேகம் போன்றவை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.